அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது

அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது
X

உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உருளைக்கிழங்கு தினம் கொண்டாடினர்

தேசிய உருளைக்கிழங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கொண்டாட்டப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்பு குழு சார்பில் மனித நேய தினம் மற்றும் உலக உருளைக்கிழங்கு தினத்தை உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் கொண்டாடினர்,

நிகழ்ச்சிக்கு நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர், நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஆசிரியர் லட்சுமணமூர்த்தி உட்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!