மோடியும், பாடியும் இனி ஆட்சிக்கே வரமுடியாது: பொன்முடி

மோடியும், பாடியும் இனி ஆட்சிக்கே வரமுடியாது: பொன்முடி
X
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கே.பொன்முடி பிரச்சாரம் செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் பனையபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மாநில துணை பொது செயலாளர் கே.பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பணத்திற்காக நம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பக்கம் சாய்ந்து வாக்கை மாற்றி போட்டதால் தற்போது போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தி இதே தொகுதியில் சுமார் 40 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தற்போது அந்த பக்கமிருந்து பலர் நம் பக்கம் சாய்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதனால் வெற்றி பிரகாசமாக உள்ளது.

வெற்றி என்பது கிளை செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கையில் தான் உள்ளது. நமது கட்சி தாய்மார்கள் நினைத்தால் குழாயடி, அக்கம் பக்கம் என 25 ஓட்டுகளை வாங்கலாம். திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை 10 ஆண்டுகளில் அழித்து, லஞ்சம் லாவண்யத்தால் சீரழித்து விட்டனர்.

மத்தியில் மோடி, தமிழகத்தில் பாடி. இந்த மத,மொழி வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலில் அதிமுகவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியும் வரவே முடியாது. அதனால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், திமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜனகராஜ், உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்