விக்கிரவாண்டி அருகே தாயை கொலை செய்தவரை போலீசார் தேடுதல்

விக்கிரவாண்டி அருகே தாயை கொலை செய்தவரை போலீசார் தேடுதல்
X

பைல் படம்.

Police Fir Search - விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Police Fir Search - விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் சாம்பசிவ ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 70). இவர்களது மகன் விஜயகுமார் (42). டிராக்டர் டிரைவர். இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தாய் பாஞ்சாலியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு விஜயகுமார் வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் அங்கிருந்த தாய் பாஞ்சாலியிடம் மேலும் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் பெற்ற தாய் என்றும் பாராமல் அங்கு கிடந்த குழவி கல்லை எடுத்து பாஞ்சாலியின் தலையில் போட்டார்.

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விஜயகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகனை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!