அவதூறு பரப்பிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு

அவதூறு பரப்பிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு
X
அவதூறு செய்தி பரப்பிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சாம்ராஜ் என்பவர் காணை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் குயவன்காடுவெட்டி கிராமத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 11-ந் தேதி காலை அங்குள்ள மின் மோட்டார் அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று நேரடியாக மின் மோட்டாரில் இணைத்து குடிதண்ணீர் கசிவு ஆகிறது என்று செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

எனவே அவதூறு செய்தி பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் முத்துகிருஷ்ணன் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததால் ஆர்ப்பாட்டம்..!