விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடிய மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடிய மக்கள்
X

விழுப்புரத்தில் மக்கள் போகி பண்டிகை கொண்டாடினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் எழுந்த மக்கள் போகியை பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடினர்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மக்கள் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இன்று அதிகாலையிலேயே போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும் புதியன பெறுதல் என்பதற்கு ஏற்ப இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி ஊராட்சியில் அதிகாலை நேரத்தில் மக்கள் எழுந்து தங்கள் வீடுகளின் வாசல்களில் பழைய துணி மற்றும் பொருட்களை தீயிட்டு எரித்து, புதிய மகிழ்ச்சியுடன், பொங்கலை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்