மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி பெயர் பலகை திறந்தனர்

மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில்  கொடியேற்றி பெயர் பலகை திறந்தனர்
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் கொடியேற்றி பெயர் பலகை திறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் சங்க கொடியேற்றி, பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி சங்க பெயர் பலகை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் விதொச ஒன்றிய செயலாளர் பி.கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் உமா, கிளை நிர்வாகிகள் அபிராமி, ஆனந்தி,பக்ரி, ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!