விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல் விழா

விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல் விழா
X

விக்கிரவாண்டியில் தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ  சான்றிதழ்களை வழங்கிய காட்சி. 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஏரிநீர் பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான விமல்குமார் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

மாவட்ட ஊராட்சிக்குமு தலைவர் ஜெயச்சந்திரன், உதவி ஆட்சியர் விமல் குமார், வட்டாட்சியர் இளவரசன், சமூக நல தனி வட்டாட்சியர் கணேஷ், வடிப்பக அலுவலக துணை வட்டாட்சியர்கள் ஜெயந்தி, வெங்கடபதி, உதவிபொறியாளர் கபிலன், வேளாண்மை கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலமுருகன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், செல்வம், சிற்றுராட்சிகள் சங்க செயலாளர் அரசகுமாரி அரிகிருஷ்ணன், நந்திவாடி பார்த்தசாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்