நந்தன் கால்வாய் திட்டம் அமைய திமுக வேட்பாளர் வாக்குறுதி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி முட்டத்தூர்,நந்திவாடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசுகையில் என்னை வெற்றி பெறச் செய்தால், தொகுதிமக்களின் 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருந்து வரும் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல, விக்கிரவாண்டி புறழிச்சாலையில் விபத்துகளால் உயிரிழப்புகள் நேரிடுவதைத் தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும், குடிநீா் பிரச்சனைக்கு தீா்வு காணப்படும், மனைப்பட்டா வழங்கப்படும். முண்டியம்பாக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது போல, அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி கொண்டு வரப்படும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu