மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்ற எம்எல்ஏ

மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்ற எம்எல்ஏ
X

பூங்கொத்து அளித்து மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ புகழேந்தி

விக்கிரவாண்டி அருகே தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எம்எல்ஏ.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களை தலைமை ஆசிரியர் செல்லையா தலைமையில் மேள தாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ புகழேந்தி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்றார். தொடர்ந்து அங்கு கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்,

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனபால், வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்,

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!