விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் தீவிர பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் தீவிர பிரச்சாரம்
X

அத்தியூர் திருக்கையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பிரச்சாரம் மேற்கொண்டா

விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஒன்றியம், அத்தியூர்திருக்கை ஊராட்சியில் அமைச்சர் சிவசங்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், அத்தியூர்திருக்கை ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சி.சடையப்பன் மற்றும் திமுக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆர் முருகன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக மாவட்ட செயலாளர் ந.புகழேந்தி எம்எல்ஏ, சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், திமுக விவசாய அணி அன்னியூர் சிவா ஆகியோர் அத்தியூர்திருக்கை ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர், அப்போது சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜிவ்காந்தி,பி.சிவராமன் மற்றும் கூட்டணி கட்சினர் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!