விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

திமுக உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் திமுக உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மத்திய மாவட்டம், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ம.ஜெயசந்திரன், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் 8 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சாவித்திரி பெருமாள் ஆகியோரை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரம் நடந்தது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், விக்கிரவாண்டி எம்.எல்‌.ஏ நா.புகழேந்தி ஆகியோர் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தனர். அப்போது மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் ஏ.சிவா , விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் வேம்பி.ரவி மற்றும் கழக நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture