சாராயம் கடத்தியவரை கைது செய்த காணை போலீசார்

Police News | Smugglers Liquor
X

பைல் படம்.

Police News - புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு சாராயம் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.

Police News -விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், அழகம்மாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர் புதுச்சேரி மாநில 40 சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பதும், இவர் புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து அரகண்டநல்லூர் வரை சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!