விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்பு
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இன்று நடந்த விபத்தில் டூ வீலரில் சென்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.

விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பிரபல வக்கீலான இவர் வக்கீல்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரகதீஷ்வர் (வயது 30). வக்கீலாக பணியாற்றி வந்தார்.

இவர் தனது சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரகதீஸ்வரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!