பழங்குடி இருளர் மக்களை மழையிலிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்த ஊராட்சி தலைவர்

பழங்குடி இருளர் மக்களை மழையிலிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்த ஊராட்சி தலைவர்
X

பழங்குடி இருளர் மக்களை மழையில் பாதுகாத்த தொரவி ஊராட்சி

மழையால் பாதிக்கப்பட்டு தொரவி ஊராட்சி பள்ளியில் தங்கியிருந்த பழங்குடி இருளர் இன மக்கள் மீண்டும் அவர்கள் குடியிருப்புக்கு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி ஊராட்சியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன குடும்பத்தினர், புதுச்சேரி ஊசூடு ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரையோரம் வசித்து வந்தனர், இவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கபட்டனர்

உடனடியாக தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், அப்பகுதிக்கு நேரில் சென்று அங்கு குடியிருந்த 27 பேரை மீட்டு, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்து, அவர்களுக்கு காய்கறி, அரிசி, போர்வை, தலையணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி, அவர்களை மழை முடியும் வரை பாதுகாப்பாக பார்த்து கொண்டார்

இந்நிலையில் இன்று அப்பகுதியில் மழை விட்டது, இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்,கிராம நிர்வாக அலுவலர் ஜெனிபர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அவர்களை வாகனம் மூலம் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்