மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்

மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்
X

தொடர் மழை காரணமாக வீடிழந்த மக்கள் 

காணை ஊராட்சியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மக்களை காண வராமல் பாராமுகத்தில் சமந்தப்பட்ட அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சியில் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் 10 பேர் வீடுகள் இடிந்து பாதிப்பிற்குள்ளானது.

வீடுகளை இழந்து தவிக்கும் அவர்கள் அனைவரும் அரசின் உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். வீடுகள் இடிந்தது குறித்து தகவல் தெரிந்தும், அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது ஏன்? என அப்பகுதி பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project