விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை
X

விக்ரவாண்டி உணவகங்களில் தயாரிக்கப்பட்டுள்ள உணவினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, இந்த சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான உணவகங்கள் மற்றும் அங்காடிகள் பெருகி உள்ளன, அதில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நெடுஞ்சாலை உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், மற்றும் கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர், அப்போது 4 உணவகங்களுக்கு தலா ரூ.2000/-அபராதம் விதித்தனர்.ஆய்வில் 7 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!