முண்டியம்பாக்கம் கிராமத்தில் வேகமெடுக்கும் கொரோனா: உடனடி நடவடிக்கை பாயுமா?
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், முண்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
அவர்களுக்கு உதவ நண்பர்கள், உறவினர்கள் மற்றும் புறநோயாளிகள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வந்து போகின்றனர்.
இவர்கள் மூலமாக முண்டியம்பாக்கம் சுற்றுவட்டாரம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முண்டியம்பாக்கம் கிராமத்தில் மட்டும் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, போர்க்கால அடிப்படையில் கொரானா தொற்று அதிகம் உள்ள தெருக்களில் தடையை ஏற்படுத்த வேண்டும். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும். உணவுக்கே வழியில்லாமல் அல்லாடுபவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu