விவசாயிகள் கூட்டு வியாபாரம் செய்து லாபம் ஈட்டலாம்
விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன்
தமிழ்நாடு அரசு விவசாயிகள் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என உதவி வேளாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு விவசாயிகள் வருமானத்தை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு நீடித்த வருமானமாக அமைந்திட சிறப்பு கவனம் செலுத்தி, விவசாயிகள் சிறு, சிறு குழுக்களாக ஆங்காங்கே ஒன்று சேர்ந்து பல்வேறு விவசாய சார்ந்த தொழிலை செய்து வருமானத்தை அதிகரிக்க முடியும். தங்கள் குழுக்கள் மூலம் சிறு விற்பனை நிலையங்களை துவங்கி தொடர் வலை அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டால் சிறப்பாக வியாபாரம் செய்ய முடியும்.
எந்தெந்த பகுதியில் எந்த தொழிலை துவக்கினால் லாபம் பெற முடியும் என்று விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விவசாய தொழிலாளர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம். விவசாய தொழில்கள் துவங்க பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, செல்போன் ஆகிய விவரங்களை வாட்ஆப் மூலம் அல்லது குறுஞ்செய்தியாக 9443778776 மற்றும் 8248226265 என்ற செல்போன்களில் பதிவு செய்து பயனடைய கேட்டுகிறோம் என் உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu