பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் கண்டனம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட அந்தியூர் திருக்கை,அனுமந்தபுரம்,கொசப்பாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மகேந்திரா என்ற தனியார் விதை கம்பெனியிடம் வாங்கி நடவு செய்த விதை நெல் 606 ரக நெல் நடவு செய்து 75 நாட்களுக்கு மேல் ஆகியும் கதிர் வரவில்லை.
இதனாால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர், இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், மாவட்டத்தில் தரமான விதைகள் ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது,
அதனையடுத்து மாவட்ட வேளாண்துறையினர் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்துள்ளனர், பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கிடைக்குமா என காத்திருக்கும் இந்நிலையில், விதை விற்பனை கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக இடுபொருள் சங்கம் என்ற பெயரில் சில வியாபாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு என்ற அடிப்படையில் பொய் பிரச்சாரம், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து உண்மைக்கு புறம்பானவற்றை கோரிக்கை மனுவாக கொடுத்து உள்ளதாக தெரிகிறது,
அச்சங்கத்தின் இச்செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து ஆய்வு செய்து உள்ள நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதேபோன்று தொடர்ந்து தரமற்ற விதைகளை கொடுக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu