கல்வி வளாகத்தில் பாலியல் வன்முறை மரணங்களை தடுக்க ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

கல்வி வளாகத்தில் பாலியல் வன்முறை மரணங்களை தடுக்க ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை
X

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்

கல்வி வளாகங்களில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 16-வது, விழுப்புரம் வட்ட மாநாடு, ஜூலை-24 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கெடாரில் உள்ள ஜி.எஸ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் ரா.முதலிவீரன் தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் எஸ், பிரகாஷ் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், வட்ட செயலாளர் க.தேவநாதன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ் பார்த்திபன் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில் கல்வி வளாக மரணங்களையும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களையும், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களின் ராணுவ கனவை சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி கடனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்,

மாநாட்டில் புதிய வட்ட நிர்வாகிகளாக வட்டத் தலைவராக ஆர். முதலிவீரன். வட்டச் செயலாளராக கே. தேவநாதன். பொருளாளராக எஸ். ஹரிதாஸ். துணைத் தலைவராக கே.செல்லபாண்டி. துணைச் செயலாளராக ஜெ. பரந்தாமன் மற்றும் இடைக் குழு உறுப்பினர்களாக, ஆறுமுகம்,மணிகண்டன்,விக்ரம், மாயகிருஷ்ணன்,பிரபாகரன், சுனில்,கிருஷ்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட பொருளாளர் எஸ், ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story