விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி பிடிஓ அலுவலகம் முன்பு வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, வானூர், கண்டமங்கலம் ஆகிய இடங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறுநாள் வேலை கேட்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமையில் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், விதொச மாவட்ட துணைச்செயலாளர் பி.கலியமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் என்.குமார், ஏ.பிரேமா, பி.பாலமுருகன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து நூறு நாள் வேலை கேட்டு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!