பிரிவு சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரிவு சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
X

இருளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள பாலத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பிரியும் இடத்தில், அழுக்கு ஓடை என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இடத்தில் திண்டிவனம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது,

அந்த பாலத்தின் வழியாக விழுப்புரம் மார்க்கம், சென்னை மார்க்கம், கும்பகோணம் மார்க்கம் ஆகிய பேருந்துகள், கடந்து செல்கின்றன. அந்த இடத்தில், இதுவரை மின்விளக்கு வசதி இல்லாததால், அந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் புதுச்சேரி மார்க்கமாக செல்ல வேண்டிய பயணிகள், அந்த இடத்தில் நின்று பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலையில், அங்கு இருட்டாக இருப்பதால், பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் கோர விபத்து நடந்தது. அதன் பிறகும் மின்விளக்கு அமைக்கவில்லை. எனவே மீண்டும் அதுமாதிரி விபத்து நடக்காமல் தடுக்க உடனடியாக அந்த பாலத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!