மறுவாக்கு எண்ணிக்கை: மாற்றுத்திறனாளி வேட்பாளர் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், பெருகலாம்பூண்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மாற்றுதிறனாளி வேட்பாளர் மகாலெட்சுமி என்பவர்விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தார் . அந்த கோரிக்கை மனுவில்
மாற்றுத்திறனாளியான நான், 09/10/2021 அன்று ஊரக உள்ள தேர்தலில் பெருங்கலம்பூண்டி கிராம ஊராட்சி மன்றத்திற்கு நடைபெற்ற ஊராட்சி தலைவர் தேர்தலில் பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிட்டேன். 12/10/2021 அன்று அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்தில் நான் பெற்ற மொத்த வாக்குகள்-245 ஆகும்.
வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சூரியகாந்தி, அவரது கத்தரிக்காய் சின்னத்திற்கு பெற்ற வாக்கும் - 245 ஆகும். இரண்டு வேட்பளர்களுக்கும் கிடைக்கப்பெற்ற வாக்குகள் சமநிலையில் இருந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கும் அலுவலரிடம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவேண்டும் அல்லது குலுக்கு சீட்டு முறையில் வேட்பாளரை தேர்வுசெய்து முடிவு அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். ஆனால், சூரியகாந்தி பெருங்கலம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வுசெய்யப்பட்டதாக தேர்தல் அறிவிக்கும் அலுவலர் அறிவித்தார்.
எனவே கலெக்டர் இதில் தலையிட்டு, மேற்படி பெருங்கலம்பூண்டி ஊராட்சி மன்ற தேர்தல்முடிவை நிறுத்தி வைத்து, , மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடவேண்டும். எங்கள் கோரிக்கையான மறுவாக்கு எண்ணிக்கை அல்லது இரண்டு வேட்பாளர்கள் சமமாக வாக்குகள் பெற்றதால் குலுக்கு சீட்டு முறையை பின்பற்ற மறுத்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu