மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
X

பைல் படம்

விழுப்புரம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மனைவி இறந்த வேதனையில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதீஷ் ( 31), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இவருடைய மனைவி அதிஷ்டலட்சுமி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலிதாங்க முடியாமல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிலிருந்து சதீஷ் மிகுந்த மனஉளைச்சலாகி குடிப்பழக்கத்திற்கு ஆளாகினார்.இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் சம்பவத்தன்று அவர், தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!