மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க தமிழக அரசு பணியாளர்கள் கோரிக்கை

மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க தமிழக அரசு பணியாளர்கள் கோரிக்கை
X
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியது போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க தமிழ் நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் ம. ரா. சிங்காரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியது போல தமிழ் நாடு அரசுப் பணியாளர்களுக்கும் 11 சதவிகித அகவிலைப் படியினை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாதந்தோரும் மருத்துவ படியினை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, வெளி ஆதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் துறை கிராம உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!