முண்டியம்பாக்கத்தில் சிபிஎம் சார்பில் சுதந்திர தின விழா

முண்டியம்பாக்கத்தில் சிபிஎம் சார்பில் சுதந்திர தின விழா
X

முண்டியம்பாக்கத்தில் சிபிஎம் கட்சியினர் சுதந்திர தின கொடியேற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ஊராட்சியில் சிபிஎம் கட்சியினர் சுதந்திரக் கொடியேற்றி கொண்டாடினர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் கடைவீதியில் சிபிஎம் கட்சி சார்பில் சுதந்திர தின கொடியேற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்,

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கட்சி வட்ட செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, கிளைச் செயலாளர் ஜெயசந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று ஒரத்தூர், விக்கிரவாண்டி, சாத்தனூர்,ஆசூர்,உலகலாம்பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட கிளைகளில் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!