திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விக்கிரவாண்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியை மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.சித்ரா, எஸ்.நீலா, ஒன்றிய குழு எஸ்.அமுதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி தாமோதரன், நகர குழு ஆர்.கிருஷ்ணராஜ், இடைக்குழு ஆர்.மணி உட்பட பெண்கள் ஆண்கள் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்