நூறு நாள் வேலை தளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

நூறு நாள் வேலை தளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாெதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுக்கும் காணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எழிலரசன்.

உமையாள்புரம் பகுதியில் நடந்த நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்பு குழுவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. காணை ஒன்றியம், உமையாள்புரத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களிடம் கொரோனா விழிப்புணர்வு நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ).எழிலரசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரத்தை பொது மக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் அருள், பணித்தள பொறுப்பாளர் செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!