விக்கிரவாண்டி தொகுதியில் ஏரி நிரம்பியது: கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி தொகுதியில் ஏரி நிரம்பியது:  கலெக்டர் ஆய்வு
X

ஏரியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏரி நிரம்பியதையடுத்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி ஒன்றியம், கஸ்பாகாரனை கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பு ஏரி முழு கொள்ளளவை எட்டியது, இதனை தொடர்ந்து, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்,

ஆய்வின்போது ஏரி பகுதியில் நீர் வரத்து, மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை அகற்றி விட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!