காணை ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

காணை ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்

காணையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்பட்டுவரும் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

காணை ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்த கலெக்டர் மோகன் கூறியதாவது: விவசாயிகளின் தேவைக்கேற்ப அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15.02.2022 முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து, விவசாயிகளின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளிலேயே விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்திடும் வகையில் 49 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே, நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் வேளாண்மை விற்பனைக்குழுக்கு சொந்தமான 9 கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து அரசுக்கு அரிசி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அரிசி அரைக்கும் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து பெறப்படும் அரிசி, அரசு கிடங்குகளில் வைத்து, நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகளவு நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுவதால், காணை ஊராட்சியில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையம் தொடங்கப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து வரக்கூடிய நெல் மூட்டைகளை பாதுகாத்து அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன் உடனிருந்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்