விழுப்புரம் மாவட்ட ஊரகத் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பாக்கம், வி.கொத்தமங்கலம் மற்றும் கல்பட்டு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (21.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது அவர் பெரும்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் பயனாளிகள் பட்டியலின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தார்.
அதன் தொடர்பான விவரங்களை வருவாய்த்துறை சேர்ந்த அலுவலர்கள் சரிபார்த்து அறிக்கை சமர்பபித்திட தெரிவித்தார், வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார், மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.16.20 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கட்டுமான பணி, வி.கொத்தமங்கலம் ஊராட்சியில் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.10.19 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமானப்பணி, சிறுவாக்கூர் முதல் கல்பட்டு வரையிலான சாலையில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.16.22 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் கிராமபுற வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளும் தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu