பழுது பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி: கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

பழுது பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி: கலெக்டர் நேரில் சென்று ஆய்வு
X

பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருகே சாமியாடி குச்சிபாளையத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பாப்பனப்பட்டு ஊராட்சியை சேர்ந்த சாமியாடி குச்சிப்பாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி கழிவறை, பயன்பாட்டில் இல்லாத வகுப்பறைகள், மிகவும் சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டிடங்கள் குறித்து விழுப்புரம் கலெக்டர்இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,

தொடர்ந்து மிகவும் பழுதடைந்த ஓட்டு பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டு, கட்டடம் இடிக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மாணவர்களை பாதுகாப்பாக மாற்று கட்டிட வகுப்பறையில் அமர செய்து பள்ளியை நடத்துமாறு தலைமையாசிரியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!