வீடுர் அணையில் மீன் பிடிக்க ஏலம்: கலெக்டர் அழைப்பு

வீடுர் அணையில் மீன் பிடிக்க ஏலம்: கலெக்டர் அழைப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விக்கிரவாண்டி அருகே உள்ள வீடுர் அணையில் மீன் பிடிப்பதற்கு ஏலத்தில் பங்குபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் அருகேயுள்ள வீடூா் அணையில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை எடுக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் விழுப்புரம் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள நீா்த்தேக்கமான வீடூா் அணையில் மீன் பிடிப்பதற்காக ஐந்தாண்டு கால குத்தகைக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் ஏலம் விட தமிழ்நாடு மீன்வளத் துறை ஆணையா் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள், அது தொடா்பான விவரங்களை www.tenders.tn.qov.in மற்றும் www.fisheries.gov.in என்ற இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரம் அறிய உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, எண்.10, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம் (தொலைபேசி எண்: 04146-259329) என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்