நூறு நாள் வேலை திட்டப்பணிகள்: விழுப்புரம் கலெக்டர் திடீர் ஆய்வு

நூறு நாள் வேலை திட்டப்பணிகள்: விழுப்புரம் கலெக்டர் திடீர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலையை,  கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலையை, மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வி.சாலை ஊராட்சியில் கொங்கராம்பூண்டி சாலை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர் உடனிருந்தனா். பணி விவரங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

Tags

Next Story
free ai tool for stock market india