கோயில் கும்பாபிஷேகத்தில் செயின் பறித்த பெண்கள் :3பேர் கைது

chain snatchingladies,3 nos arrested விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருவாமாத்தூர் சிவன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது செயின் பறிக்க முயற்சித்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

chain snatchingladies,3 nos arrested

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட திருவாமத்தூர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவின் போது செயின் பறிக்க முயற்சி செய்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில்விழுப்புரம் உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில்தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் தலைமையில்திருவாமாத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள வந்து கொண்டு இருந்தனர், இதனால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூடி கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்,

chain snatchingladies,3 nos arrested

இந்நிலையில் அங்கு குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து ஈடுபட்டு கொண்டு இருந்தனர், அப்போதுதிருவிழாவிற்கு வந்த கடலூர் மாவட்டம்,பண்ருட்டி தொரைபாடி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் மோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த கூட்டத்தில்

அவரின் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் மற்றும் கழுத்தில் செயினை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக 3 பெண்கள் பிடிபட்டனர்.அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பட்டி,பாபா தெருவில் வசிக்கும் ராஜு மனைவி மேகலா என்கிற இசக்கியம்மாள் வயது 38, ஜோசப் மனைவி மஞ்சு என்கிற கவிதா வயது 39, ஐயப்பன் மனைவி காளியம்மாள் வயது 45 ஆகிய மூவர் என்பது தெரிய வந்தது இதனை எடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்று கடந்து சில நாட்களுக்கு முன்பு கொல்லிய கோணத்தில் கும்பாபிஷேகத்தின் போது செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் மேலும் இது மாதிரி மாவட்டங்களில் கோயில்களில் திருவிழா கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் போது கூட்டங்கள் அதிகமாக கூடுவதை கண்காணித்து இது மாதிரியான செயின் பறிப்பு பர்ஸ் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளில் கும்பலாக குரூப் குரூப்பாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர் இதனை;j தடுக்க காவல்துறையினர் கண்காணித்து வெளி மாவட்டம் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தீவிரமாக கண்காணித்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது போன்ற கோரிக்கைகள் எழும்பி வருகிறது மேலும் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை மக்கள் கூடும் இடங்களில் ஒட்டி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!