உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார பொதுக்கூட்டம்

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

முண்டியம்பாக்கம் கடைவீதியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார், கிளைச் செயலாளர் வி.பூபாலன் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் கலந்து கொண்டு வேட்பாளர் நா.புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வலியுறுத்தி பேசினார்,

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன், எஸ்.கீதா,ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தண்டபாணி, எஸ்.சித்ரா, ஆர்.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!