விக்கிரவாண்டி பேரூராட்சியில் முக கவசம் அணிய விழிப்புணர்வு தீர்மானம்

We Wear The Mask  | Awareness
X

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

We Wear The Mask - விக்கிரவாண்டியில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் முக கவசம் அணிய விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

We Wear The Mask -விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மன்ற துணைத்தலைவர் பாலாஜி, செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சி திட்ட பணிகள் செய்வது குறித்தும், அனைத்து வார்டுகளில் சுகாதார நடவடிக்கைகள் மேம்பாடு செய்வது குறித்தும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கனகாசக்திவேல், சுரேஷ், ரமேஷ், ரேவதி வீராசாமி, புஷ்பராஜ், ஆனந்தி, வீரவேல், சுதா பாக்கியராஜ்,பவானி ராஜேஷ், சுபா சிவஞானம், வெண்ணிலா காத்தவராயன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், கம்யூட்டர் ஆப்ரேட்டர் கீதா உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!