விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணன்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவுரைகளின் படி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியம், முண்டியம்பாக்கம், ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்,100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி, மற்றும் பேரணி நடைபெற்றது,
இந்தநிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார், முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட இணை கன்வீனர் தமிழழகன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி வட்டார கல்வி அலுவலர் நா. தேன்மொழி, விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உதவி திட்ட அலுவலர்( மகளிர் திட்டம்) கலைவாணன், . மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், கலைக்குழு ஹேமலதா, முதுகலை ஆசிரியர் பெருமாள், முண்டியம்பாக்கம் உடற்கல்வி ஆசிரியர் சந்திரன். எசாலம் உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை, முண்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற செயலாளர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மகளிர் சங்க குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,முடிவில் விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை கமாண்டர் ரத்தின மணி நன்றி கூறினார்,
விழிப்புணர்வு பேரணி முண்டியம்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து மகளிர் சங்க குழுவினர் கையில் பதாகைகள் ஏந்தியும், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர், முடிவில் 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடக்க உறுதி மொழி எடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu