நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

உமையாள்புரம் அங்கன்வாடி வளாகத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் தண்ணீர் சேமிப்பு வாரத்தை முன்னிட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு உமையாள்புரம் அங்கன்வாடி வளாகத்தில் நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் யுவராணி துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு வழங்கினார், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா நிலத்தடி நீரைப் பற்றி மக்களுக்கு விளக்கி கூறினார்,
இந்த நிகழ்ச்சியில் பனமலை ஊராட்சி செயலாளர் அருள், மற்றும் ரோட்டரி பிரேம்,சந்தோஷ்,செவிலியர் சாந்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu