கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு

கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு
X

பெருக்கலம்பூண்டி கிராமத்தில் கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

விக்கிரவாண்டி பெருக்கலம்பூண்டி கிராமத்தில் கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பாக கல்வி தொலைக்காட்சி விழிப்புணர்வு பெருங்கலம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்றது .

கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார், மாணவ மாணவிகளின் வீட்டுக்குச் சென்று கல்வி தொலைக்காட்சியின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர், இதில் பெருங்கலம் பூண்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லல்லி, ஆசிரியர்கள் கோவிந்தராஜ்,அசின் பாஷா ஆகியோர் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்கள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!