விழுப்புரம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநாடு
Agricultural Worker -விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், கஞ்சனூர் சமூதாய கூடத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.பி.ராமமூர்த்தி சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய துணைத்தலைவர் கே.காபிரியேல் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் பி.கலியமூர்த்தி வேலை அறிக்கையை வாசித்தார், ஒன்றிய பொருளாளர் இ.சுந்தர் வரவு செலவு கணக்கை சமர்பித்தார், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு மாநாட்டு நிறையுரை ஆற்றினார்.
மாநாட்டில் நூறு நாள் வேலையை இரு நூறு நாளாக்கி, கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், நூறுநாள் வேலை கேட்டு இந்த மாதத்தில் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவராக எம்.சேகர், ஒன்றிய செயலாளராக பி.கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளராக என்.குமார் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இது போன்ற மாநாடுகளை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டு தீர்மானமாக நிறைவேற்றி வருவதால் அந்த தீர்மானங்கள் அரசு கணக்கில் எடுத்து பல தீர்மானங்களுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் அகில இந்திய விவசாய சங்கத்தை மக்கள் பயன்பாட்டின் அடிப்படையில் பெரிதும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஏ அர்ஜுனன் மாவட்ட செயலாளர் கே சுந்தரமூர்த்தி ஆகியோரின் தீவிர செயல்பாட்டில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருவதோடு மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வை நோக்கி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி அதற்கான தீர்வுகளை பெற்று தருவதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முன்னிலையில் உள்ளன. அதனால் மாநாட்டில் அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அனைவரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu