ஓட்டலில் வாங்கி வந்த நூடூல்ஸ் சாப்பிட்ட புதுப்பெண் உயிரிழப்பு

ஓட்டலில் வாங்கி வந்த நூடூல்ஸ் சாப்பிட்ட புதுப்பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

விக்கிரவாண்டி அருகே ஓட்டலில் வாங்கி வந்த நூடூல்ஸ் சாப்பிட்ட புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர் அதனால் 'புட் பாயிசன்' ஏற்பட்டு இறந்து உள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி பிரதீபா (வயது 22). இவர்கள் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 13ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விழுப்புரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு பிரதீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, டாக்டர் 'புட் பாய்சன்' என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story