பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்
X
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை அருகே உள்ள ஆயந்தூர் என்ற இடத்தில் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது, அப்போது திடீரென ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது, விபத்து ஏற்பட்டால் தடுக்க பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயன்றார், அப்போது பேருந்து ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கழிந்தது, இதில் பேருந்தில் வந்த மாணவர்கள் 11 பேர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், உடனடியாக தகவலறிந்த காணை போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அனைத்து மருத்துவ வசதிகளும் விரைந்து மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.இலட்சுமணன்,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai in future agriculture