ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஆரோவில்லில் சாலைப்பணிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில், இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை மற்றும் ஆரோவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதில் மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பசுமை வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ஆட்சியர் மோகன் தலைமையில் ஆரோவில்லில் பசுமை வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!