வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள கமலாபுரத்தில் 'எம்-சாண்ட்' குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.அந்த மனுவில் கமலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு தற்போது 'எம்-சாண்ட்' குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் 'எம்-சாண்ட்' துகள்கள் படிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இங்கு 'எம்-சாண்ட்' குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்