பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலி

பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலி
X

பைல் படம்.

வானூர் வட்டத்திற்குட்பட்ட கிளியனூரில் பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு 2 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. வீட்டு வாசலில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்து. அப்போது, அங்கு மினி சரக்கு வேனில் இருந்து தனியார் பாலை இறக்கிய அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் மனோஜ் (23) வேனை பின்பக்கமாக எடுத்துள்ளார். அப்போது பின்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹரிணி பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஹரிணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!