பேருந்து நிலையமா? மாட்டு கொட்டகையா?: பயணிகள் கொதிப்பு

பேருந்து நிலையமா? மாட்டு கொட்டகையா?: பயணிகள் கொதிப்பு
X

மாட்டு கொட்டகையாகவும் வாகன நிறுத்துமிடமாகவும் மாறிய திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம்

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருப்பது பேருந்து நிலையமா இல்லை மாட்டு கொட்டகையா?. பயணிகள் கொதிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ளது பேருந்து நிலையமா,மாட்டு கொட்டகையா என அப்பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் கொதித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் புதுச்சேரி சாலையில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிலையம் பேருந்து பயணிகளுக்கு பயன்படுகிறதோ, இல்லையோ, அங்கு சுற்றி திரியும் மாடுகளுக்கு கொட்டகையாக பயன்படுகிறது.

பேருந்து நிலையத்தில் மாட்டு சாணம் குவியல் குவியலாக கிடக்கிறது, மேலும் இதுமட்டுமின்றி பேருந்து நிலையம் தற்போது மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களாக மாறிவிட்டது.மாட்டு சிறுநீர் தேங்கிய நிலையில் அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி, பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது,

உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து, மக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் கொதித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology