ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்

ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்
X
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை பறிமுதல் செய்தது

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு கடந்த இருந்த சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஆரோவில்லில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 7 உலோக சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆரோவில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை கடைக்கு விரைந்தனர். மேலும் அந்த கடையில் சோதனை செய்ததில் அர்த்த நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உலோக சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project