தலைக்கவசம் அணியாத போலீஸ் ஐ.ஜி.மகனுக்கு அபராதம் விதித்தார் இன்ஸ்பெக்டர்

தலைக்கவசம் அணியாத போலீஸ் ஐ.ஜி.மகனுக்கு அபராதம் விதித்தார் இன்ஸ்பெக்டர்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாத உத்தரப்பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் ஐ.ஜி.யாக உள்ளவரின் 18வயது மகன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்கு ப்பத்தில் இருந்து, பெரிய முதலியார் சாவடியை நோக்கி ஸ்கூட்டியில் வந்து உள்ளார். அப்போது, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன், பச்சைவாழியம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த அந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் எனது அப்பா ஐ.ஜி., என கூறியுள்ளார்.

அதற்கு காவல் ஆய்வாளர் ராபின்சன் யாராக இருந்தால் என்ன எனக் கூறி மொபைல் போனில் பேசியதாகவும், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும், 2 வழக்குகள் பதிந்து 200 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!