ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம் மனு

ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
X

விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டி ஊராட்சி துணை தலைவர் தேர்தலை பாதுகாப்பாக நடத்தக்கோரி மன்ற உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டு ஊராட்சி துணை தலைவர் தேர்தலை பாதுகாப்புடன் நடத்த ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் துணை தலைவர் தேர்தல் நடத்த ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் 22.10.2021 அன்று நடைபெறாமல் நின்று விட்டது. முட்ராம்பட்டு ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 வார்டு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக வீரப்பன் என்பவரை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களிக்கச் சென்ற போது எங்கள் 4 நபர்களையும் வாக்களிக்க விடாமல்,

தேர்தலை முறையாக நடத்த விடாமல் தி.மு.க வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவருக்கு சாதகமான வார்டு உறுப்பினரை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வலியுறுத்தி பிரச்சனை செய்து தேர்தலை தடுத்து நிறுத்தி விட்டார். மீண்டும் வருகின்ற 29.11.2021 அன்று நடைபெற இருக்கும் முட்ராம்பட்டு கிராம ஊராட்சி மன்றத் துணை தலைவர் தேர்தலை ஆளுங்கட்சியின் தலையீடு மற்றும் அச்சுறுத்தல்இல்லாமல், எந்த வித முறைகேடும் நடைபெறாமல் நியாயமான முறையில்,சர்வ சுதந்திரமாக மறைமுக தேர்தலை உரிய போலீஸ் பாதுகாப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு